Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 119)

Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்

ஸ்வாயம்புவோ மநுரதோ ஜநஸர்க சீலோ த்ருஷ்ட்வா மஹீமஸமயே ஸலிலே நிமக்நாம் ஸ்ரஷ்டாரமாப சரணம் பவதங்க்ரி ஸேவா துஷ்டாசயம் முநிஜனை: ஸஹ ஸத்யலோகே ஸ்வாயம்புவ: மநு: அதோ ஜநஸர்க சீல: த்ருஷ்ட்வா மஹீம் அஸமயே ஸலிலே நிமக்நாம் ஸ்ரஷ்டாரம் ஆப சரணம் பவத் அங்க்ரி ஸேவா துஷ்ட ஆசயம் முநிஜனை: ஸஹ ஸத்யலோகே स्वायम्भुवो मनुरथो जनसर्गशीलो दृष्ट्वा महीमसमये सलिले निमग्नाम् । स्रष्टारमाप शरणं भवदङ्घ्रिसेवा - तुष्टाशयं मुनिजनैस्सह सत्यलोके

குருவாயூரப்பா! ஸ்ருஷ்டியில் ஈடுபட்டிருந்த மநு (ப்ரும்மாவால் உருவாக்கப்பட்டவன்), ப்ரளயம் அல்லாத ஒரு காலத்திலேயே, பூமி நீரில் முழுகுவதைக் கண்டு, முனிவர்களுடன் விரைவாக ஸத்யலோகத்திற்குச் சென்றான். அங்கு உன்னுடைய திருப்பாதங்களில் சரணம் புகுவதையே தனது தொழிலாகக் கொண்டதால் மகிழ்வான இதயம் கொண்ட ப்ரும்மாவின் கால்களில் சரணம் அடைந்தான்.

ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தம், அத்யாயங்கள் 13, 18 மற்றும் 19 ஆகியவை இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளது.