Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 118)

Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்

தத: ஜலேசாத் ஸத்ருசம் பவந்தம் நிசம்ய பப்ராம கவேஷயம்ஸ்த்வாம் பக்தைகத்ருச்ய: ஸ க்ருபாநிதே த்வம் நிருந்தி ரோகாந் மருதாலயேச தத: ஜலேசாத் ஸத்ருசம் பவந்தம் நிசம்ய பப்ராம கவேஷயந் த்வாம் பக்தைக த்ருச்ய: ஸ க்ருபாநிதே த்வம் நிருந்தி ரோகாந் மருதாலயேச ततो जलेशात्सदृशं भवन्तं निशम्य बभ्राम गवेषयंस्त्वाम् । भक्तैकदृश्यः स कृपानिधे ! त्वं निरुन्धि रोगान् मरुदालयेश !

குருவாயூரப்பா! கருணைக்கடலே! அந்த இரண்யாக்ஷன், வருணன் மூலமாக உன்னைத் தமக்கு நிகரானவன் என்று அறிந்தான் (இரண்யாக்ஷன் கடலில் இறங்கி வருணனிடம் சண்டையிடச் சென்றபோது வருணன் இதனைக் கூறினான்). அதன் பின்னர் உன்னைத் தேடி அலைந்தான். குருவாயூரின் அதிபதியே! பக்தனால் மட்டுமே உன்னைக் காணமுடியும் அன்றோ! (இதனை இரண்யாக்ஷன் அறியவில்லை போலும்). எனது நீ அனைத்து பிணிகளையும் நீக்கவேண்டும்.***