Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 117)

Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்

தயோர்ஹிரண்யாக்ஷ மஹாஸுரேந்த்ர: ரணாய தாவந்நநவாப்தவைரீ பவத்ப்ரியாம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ய சசார கர்வாத்விநதந் கதாவாந் தயோ: ஹிரண்யாக்ஷ மஹாஸுரேந்த்ர: ரணாய தாவந் அநவாப்த வைரீ பவத் ப்ரியாம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ய சசார கர்வாத் விநதந் கதாவாந் तयोर्हिरण्याक्षमहासुरेन्द्रो रणाय धावन्ननवाप्तवैरी । भवत्प्रियां क्ष्मां सलिले निमज्य चचार गर्वाद्विनदन् गदावान्

குருவாயூரப்பா! அவர்களில் ஒருவனான இரண்யாக்ஷன் தன்னுடன் போர் புரியத் தகுந்த பகைவன் எவனையும் காண முடியாமல் அலைந்தான். அப்போது உன் மீது ப்ரியமானவளான பூமிதேவியை கவர்ந்து எடுத்துச் சென்று கடலின் அடியில் மறைத்து வைத்தான். தொடர்ந்து தனது கர்வத்தின் காரணமாகக் கர்ஜனை செய்து, கதை என்ற ஆயுதத்துடன் சுற்றி வந்தான் அல்லவா?