Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 115)

Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்

த்வதீய ப்ருத்யாவத கச்யபாத்தௌ ஸுராரி வீராவுதிதௌ திதௌ த்வௌ ஸந்த்யா ஸமுத்பாதந கஷ்டசேஷ்டௌ யமௌ ச லோகஸ்ய யமாவிவாந்யௌ த்வதீய ப்ருத்யௌ அத கச்யபாத் தௌ ஸுராரி வீரௌ ஆதிதௌ திதௌ த்வௌ ஸந்த்யா ஸமுத்பாதந கஷ்ட சேஷ்டௌ யமௌ ச லோகஸ்ய யமௌ இவ அந்யௌ त्वदीयभृत्यावथ काश्यपात्तौ सुरारिवीरावुदितौ दितौ द्वौ । सन्ध्यासमुत्पादनकष्टचेष्टौ यमौ च लोकस्य यमाविवान्यौ

குருவாயூரப்பா! உன்னால் நல்வார்த்தைகள் கூறப்பட்ட ஜயவிஜயர்கள் இருவரும், கச்யப முனிவருக்கும் அவரது மனைவியான திதி என்பவளுக்கும், தேவர்களுடைய சத்ருக்களான அசுர வீரர்களாக பிறந்தனர். கச்யபரும் திதியும் இணைந்தது ஸந்த்யாகாலத்தில் என்பதால், இந்த இருவருக்கும் பிறந்த புத்திரர்கள் இருவரும், யமனைப் போன்றே (அனைவருக்கும் துயரை விளைவிப்பவர்களாக) விளங்கினர்.