Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 114)
Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்
ப்ரஸாத்ய கீர்ப்பி: ஸ்துவத: முனீந்த்ராந் அநந்ய நாதாவத பார்ஷதௌ தௌ ஸம்ரம்பயோகேந பவைஸ்த்ரிபிர்மாம் உபேதாமித்யாத்தக்ருபம் ந்யகாதீ: ப்ரஸாத்ய கீர்ப்பி: ஸ்துவத: முனீந்த்ராந் அநந்ய நாதௌ அத பார்ஷதௌ தௌ ஸம்ரம்பயோகேந பவை: த்ரிபி: மாம் உபேதாம் இதி ஆத்த க்ருபம் ந்யகாதீ: प्रसाद्य गीर्भिः स्तुवतो मुनीन्द्रा – ननन्यनाथावथ पार्षदौ तौ । संरम्भयोगेन भवैस्त्रिभिर्मा – मुपेतमित्यात्तकृपां न्यगादीः
குருவாயூரப்பா! நீ உள்ளிருந்து வெளியே வந்த பின்னர் உன்னை அந்த முனிவர்கள் வணங்கி நின்றனர். அவர்களின் கோபத்தை, உனது கனிவான சொற்களால் சமாதானம் செய்தாய். பின்னர் ஜயவிஜயர்களை நோக்கி, “நீங்கள் இருவரும் என்னை விரோதம் செய்வதன் மூலம் உண்டாகும் த்வேஷ யோகம் செய்து, மூன்று பிறவிகளுக்குப் பின்னர், மீண்டும் என்னை வந்து அடைவீர்களாக”, என்று ஆதரவு இல்லாத அவர்களிடம் கூறினாய் அல்லவா?