Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 113)
Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்
ததேதாஜ்ஞாய பவாந்வாப்த: ஸஹைவ லக்ஷ்ம்யா பஹிரம்புஜாக்ஷ ககேச்வராம்ஸார்ப்பித சாருபாஹு: ஆநந்தயம்ஸ்தாநபிராம மூர்த்யா தத் ஏதத் ஆஜ்ஞாய பவாந் அவாப்த: ஸஹ ஏவ லக்ஷ்ம்யா பஹி: அம்புஜாக்ஷ ககேச்வர அம்ஸ அர்ப்பித சாரு பாஹு: ஆநந்தயம் தாந் அபிராம மூர்த்யா तेदेतदाज्ञाय भवानवाप्तः सहैव लक्ष्म्या बहिरंबुजाक्ष । खगेश्वरांसार्पितचारुबाहु – रानन्दयंस्तानभिराममूर्त्या
தாமரை மலர் போன்று அழகான கண்கள் கொண்ட குருவாயூரப்பா! வாயிலில் நடந்த விவரத்தை அறிந்துகொண்டு மஹாலக்ஷ்மியுடன் இணைந்து, கருடனின் தோளில் உனது அழகான கைகளை வைத்துக்கொண்டு, உனது அழகான திருமேனியுடன், ஸநகர் முதலான அந்த முனிவர்களை ஆனந்தப்பட வைப்பவனாக நீ வெளியில் வந்தாய் அல்லவா?