Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 112)
Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்
வைகுண்டலோகாநுசித ப்ரசேஷ்டௌ கஷ்டௌ யுவாம் தைத்யகதிம் பஜேதம் இதி ப்ரசப்தௌ பவதாச்ரிதௌ தௌ ஹரிஸ்ம்ருதிர்நோSஸ்த்விதி நேமதுஸ்தாந் வைகுண்டலோக அநுசித ப்ரசேஷ்டௌ கஷ்டௌ யுவாம் தைத்ய கதிம் பஜேதம் இதி ப்ரசப்தௌ பவத் ஆச்ரிதௌ தௌ ஹரி: ஸ்ம்ருதி: ந: அஸ்து இதி நேமது: தாந் वैकुण्ठलोकानुचितप्रचेष्तौ कष्टौ युवां दैत्यगतिं भजेतम् । इति प्रशप्तौ भवदाश्रयौ तौ हरिस्मृतिर्नोऽस्त्विति नेमतुस्तान्
குருவாயூரப்பா! ஸநகர் முதலான ரிஷிகள் அந்த வாயிற்காப்பவர்களை நோக்கி, “துஷ்டர்களே! ஸ்ரீவைகுண்டலோகத்திற்குப் பொருந்தாதவிதமாக நீங்கள் நடந்து கொண்டதால் அசுரப்பிறவி அடைவீர்கள்”, என்று சபித்தனர் (இவர்கள் சாபத்தின்படி ஜயன் மற்றும் விஜயன் இருவரும் இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷனாகவும், இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், சிசுபாலன் மற்றும் தந்தவக்கிரனாகவும் பிறந்தனர்). இதனால் மனம் வருந்திய ஜயன் மற்றும் விஜயன் ஆகிய இருவரும் அந்த முனிவர்களிடம், “நாங்கள் எப்படிப் பிறந்தாலும் அந்த ஸ்ரீஹரியின் நினைவு நீங்காமல் இருக்கவேண்டும்”, என்று வேண்டி அவர்களை வணங்கினார்கள்.