Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 111)

Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்

பவத்தித்ருக்ஷுந் பவநம் விவிக்ஷுன் த்வா: ஸ்தௌ ஜயஸ்தாந் விஜயோSப்யருந்தாம் தேஷாம் ச சித்தே பதமமாப கோப: ஸர்வம் பவத் ப்ரேரணயைவ பூமந் பவத் தித்ருக்ஷுந் பவநம் விவிக்ஷுன் த்வா: ஸ்தௌ ஜய: தாந் விஜய: அபி அருந்தாம் தேஷாம் ச சித்தே பதம் ஆப கோப: ஸர்வம் பவத் ப்ரேரணயா ஏவ பூமந் भवद्दिदृक्षून्भवनं विविक्षून्द्वाःस्थौ जयस्थान् विजयोऽप्यरुन्धाम् । तेषां च चित्ते पदमाप कोपः सर्वं भवत्प्रेरणयैव भूमन्

எங்கும் நிறைந்துள்ள குருவாயூரப்பா! உனது தரிசனம் பெற விருப்பமுற்றவர்களாகவும், உனது இடத்திற்குள் நுழைய விரும்பியவர்களாகவும் வந்த ஸநகர் முதலியவர்களை வாயிற்காப்போர்களான ஜயன் மற்றும் விஜயன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஸநகாதிகள் மனதில் கோபம் உண்டாயிற்று. இவை உனது விருப்பப்படி அல்லவா நடந்தது !