Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 108)

Dasaka 10 - பலவிதமான படைப்புகள்

ஜாநந்நுபாயமத தேஹமஜோ விபஜ்ய ஸ்திரீ பும்ஸபாவமபஜந்மநுதத்வதூப்யாம் தாப்யாம் ச மாநுஷகுலாநி விவர்தயம்ஸ்த்வம் கோவிந்த மாருதபுரேச நிருந்தி ரோகாந் ஜாநந் உபாயம் அத தேஹம் அஜ: விபஜ்ய ஸ்திரீ பும்ஸ பாவம் அபஜத் மநு தத் வதூப்யாம் தாப்யாம் ச மாநுஷ குலாநி விவர்தயந் த்வம் கோவிந்த மாருதபுரேச நிருந்தி ரோகாந் जानन्नुपायमथ देहमजो विभज्य स्त्रीपुंसभावमभजन्मनुतद्वधूभ्याम् । ताभ्याञ्च मानुषकुलानि विवर्धयंस्त्वं गोविन्द ! मारुतपुरेश निरुन्धि रोगान्

குருவாயூரின் அதிபதியே! கோவிந்தனே! அப்போது ப்ரும்மாவுக்கு ஸ்ருஷ்டிக்கான உபாயம் ஒன்று உதித்தது. தனது உடலை இரண்டாகப் பிரித்து மனு என்ற ஆணாகவும், ஸதரூபை என்ற பெண்ணாகவும் தோன்றினான். அவர்கள் மூலம் மனித இனத்தைப் பெருக்கினான். இப்படியாக மனித குலத்தைப் படைப்பவனே! நீ பிணிகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.***