Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 107)
Dasaka 10 - பலவிதமான படைப்புகள்
வேதாந் புராண நிவாஹாநபி ஸர்வ வித்யா: குர்வந் நிஜாநந கணாச்சதுராநநோSஸௌ புத்ரேஷு தேஷு விநிதாய ஸ ஸர்க வ்ருத்திம் அப்ராப்நுவம்ஸ்தவ பதாம்புஜமாச்ரிதோபூத் வேதாந் புராண நிவாஹாந் அபி ஸர்வ வித்யா: குர்வந் நிஜ ஆநந கணாத் சது: ஆநந அஸௌ புத்ரேஷு தேஷு விநிதாய ஸ ஸர்க வ்ருத்திம் அப்ராப்நுவந் தவ பதாம்புஜம் ஆச்ரித: அபூத் वेदान्पुराणनिवहानपि सर्वविद्याः कुर्वन्निजाननगणाच्चतुराननोऽसौ । पुत्रेषु तेषु विनिधाय स सर्गवृद्धि - मप्राप्नुवंस्तव पदाम्बुजमाश्रितोऽभूत्
குருவாயூரப்பா! நான்கு முகங்கள் கொண்ட ப்ரும்மா தன்னுடைய முகங்களின் இருந்து வேதங்கள், புராணங்கள் மற்றும் அனைத்து வித்யைகளையும் படைத்தான். இவற்றைத் தனது புத்திரர்களுக்கு உபதேசம் செய்தான். இத்தனைக்குப் பிறகும் ஸ்ருஷ்டியானது வளர்ச்சி அடையாதது கண்டு உன்னுடைய திருவடிகளை த்யானித்தான்.