Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 106)

Dasaka 10 - பலவிதமான படைப்புகள்

தர்மாதிகாநபிஸ்ருஜந்நத கர்தமம் ச வாணீம் விதாய விதிரங்கஜ ஸங்குலோSபூத் த்வத் போதிதைஸ்ஸநக தக்ஷமுகைஸ்தநூஜை: உத்போதித: ச விரராம தமோ விமுஞ்சன் தர்ம ஆதிகாந் அபிஸ்ருஜந் அத கர்தமம் ச வாணீம் விதாய விதி: அங்கஜ ஸங்குல: அபூத் த்வத் போதிதை: ஸநக தக்ஷமுகை: தநூஜை: உத்போதித: ச விரராம தமோ விமுஞ்சன் धर्मादिकानभ्सृजन्नथ कर्दमं च वाणीं विधाय विधिरङ्गजसङ्कुलोऽभूत् । त्वद्बोधितैः सनकदक्षमुखैस्तनूजै - रुद्बोधितश्च विरराम तमो विमुञ्चन्

குருவாயூரப்பா! அதன் பின்னர் ப்ரும்மா தர்மத்தையும் கர்த்தமரையும் படைத்தான். தொடர்ந்து சரஸ்வதியைப் படைத்து அவள் மீது காம வசப்பட்டான். அந்த நேரத்தில் ப்ரும்மாவின் புத்திரர்களான ஸநகன், தக்ஷன் போன்றோர் உன்னால் தூண்டப்பட்டு, ப்ரும்மாவுக்கு அறிவுரை செய்தனர். இதனால் அஞ்ஞானத்தில் இருந்து ப்ரும்மா மீண்டான்.