Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 105)
Dasaka 10 - பலவிதமான படைப்புகள்
தஸ்யாத ஸர்க ரஸிகஸ்ய மரீசிரத்ரி: தத்ராங்கிரா: க்ரதுமுனி: புலஹ: புலஸ்த்ய: அங்காதஜாயத ப்ருகுச்ச வஸிஷ்ட தக்ஷௌ ஸ்ரீநாரதச்ச பகவன் பவதங்க்ரிதாஸ: தஸ்ய அத ஸர்க ரஸிகஸ்ய மரீசி: அத்ரி: தத்ர அங்கிரா: க்ரதுமுனி: புலஹ: புலஸ்த்ய: அங்காத் அஜாயத ப்ருகு: ச வஸிஷ்ட தக்ஷௌ ஸ்ரீநாரத: ச பகவன் பவத் அங்க்ரி தாஸ: तस्याथ सर्गरसिकस्य मरीचिरत्रि - स्तत्राङ्गिराः क्रतुमिनिः पुलहः पुलस्त्यः । अङ्गादजायत भृगुश्च वसिष्ठदक्षौ श्रीनारदश्च भगवन् भवदंघ्रिदासः
குருவாயூரப்பா! மீண்டும் படைத்தல் செயலில்தானே ஆர்வம் கொண்டான் (ப்ரும்மா). அப்போது அவன் உடலில் இருந்து ஒன்பது முனிவர்கள் தோன்றினர். அவர்கள் - மரீசி, அத்ரி, அங்கிரஸ், க்ரது, புலஹர், புலஸ்தியர், ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர் ஆகியோர் ஆவர். மேலும், பகவானே! உன் மீதும் உனது பாதங்களின் மீதும் அன்பு பூண்ட நாரதர் தோன்றினார் (விளக்கம் காண்க).விளக்கம் – நான்முகனுடைய மனதிலிருந்து மரீசி, கண்களிலிருந்து அத்ரி, முகத்திலிருந்து அங்கிரஸ், கையிலிருந்து க்ரது, தோலிலிருந்து ப்ருகு, ப்ராணலிருந்து வஸிஷ்டர், கட்டைவிரலிலிருந்து தக்ஷர், மடியிலிருந்து நாரதர் தோன்றினர்.