Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 104)
Dasaka 10 - பலவிதமான படைப்புகள்
ருத்ராபிஸ்ருஷ்ட பயதாக்ருதி ருத்ர ஸங்க ஸம்பூர்யமாண புவந த்ரய பீதி சேதா: மா மா ப்ரஜா ஸ்ருஜ தபச்சர மங்கலாய இதி ஆசஷ்ட தம் கமலபூ: பவதீரிதாத்மா ருத்ர அபிஸ்ருஷ்ட பயத ஆக்ருதி ருத்ர ஸங்க ஸம்பூர்யமாண புவந த்ரய பீதி சேதா: மா மா ப்ரஜா ஸ்ருஜ தப: சர மங்கலாய இதி ஆசஷ்ட தம் கமலபூ: பவத் ஈரிதாத்மா रुद्राभिसृष्टभयदाकृतिरुद्रसंघ- संपूर्यमाणाभुवनत्रयभीतचेताः । मा मा प्रजाः सृज तपश्चर मङ्गलाये - त्याचष्ट तं कमलभूर्भवदीरितात्मा
குருவாயூரப்பா! ருத்ரனால் உண்டாக்கப்பட்ட பயங்கரமான தோற்றம் உடைய ருத்ரர்களால் இந்த மூன்று லோகங்களும் நிறைவதைக் கண்ட ப்ரும்மா பயந்தான். உன்னால் தூண்டப்பட்ட ப்ரும்மா ருத்ரர்களை நோக்கி, “நீங்கள் இனி படைக்க வேண்டாம். உலக நன்மைக்காகத் தவம் இயற்றுங்கள்”, என்றான்.