Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 103)
Dasaka 10 - பலவிதமான படைப்புகள்
ஏகாதசாஹ்வயதயா ச விபிந்ந ரூபம் ருத்ரம் விதாய தயிதா வநிதாச்ச தத்வா தாவந்த்யதத்த ச பதாநி பவத்ப்ரணுந்ந: ப்ராஹ ப்ரஜா விரசனாய ச ஸாதரம் தம் ஏகாதச ஆஹ்வயதயா ச விபிந்ந ரூபம் ருத்ரம் விதாய தயிதா வநிதா: ச தத்வா தாவந்தி அதத்த ச பதாநி பவத் ப்ரணுந்ந: ப்ராஹ ப்ரஜா விரசனாய ச ஸாதரம் தம் एकादशाह्वयतया च विभिन्नरूपं रुद्रं विधाय दयिता वनिताश्च दत्त्वा । तावन्त्यदत्त च पदानि भवत्प्रणुन्नः प्राह प्रजाविरचनाय च सादरं तम्
குருவாயூரப்பா! உன்னால் படைப்பதற்காகத் தூண்டப்பட்ட ப்ரும்மா, ருத்ரனை பதினொரு உருவங்கள் எடுக்கச் சொன்னான். ஒவ்வோர் உருவத்திற்கும் அன்பான மனைவியை (பதினொரு மனைவிகள்) அளித்தான். அவர்களுக்குத் தனித்தனியான இடமும் அளித்தான். பின்னர் ப்ரஜைகளை உருவாக்கும்படி கூறினான் (ருத்ரனுடைய பதினொரு உருவங்கள், அவர்களுடைய மனைவிமார்கள் ஆகியவை குறித்து ஸ்ரீமத்பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம், அத்யாயம் பன்னிரண்டு, ச்லோகங்கள் 11 முதல் 13ல் கூறப்பட்டுள்ளது).