Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 102)

Dasaka 10 - பலவிதமான படைப்புகள்

தாவத் ப்ரகோபமுதிதம் ப்ரதிருந்ததோSஸ்ய ப்ரூமத்யதோSஜநி ம்ருட: பவதேக தேச: நாமாநி மே குரு பதாநி ச ஹா விரிஞ்சேத் ஆதௌ ருரோத கில தேந ஸ ருத்ர நாமா தாவத் ப்ரகோபம் உதிதம் ப்ரதிருந்தத: அஸ்ய ப்ரூமத்யத: அஜநி ம்ருட: பவத் ஏக தேச: நாமாநி மே குரு பதாநி ச ஹா விரிஞ்சேத் ஆதௌ ருரோத கில தேந ஸ ருத்ரநாமா तावत् प्रकोपमुदितं प्रतिरुन्धतोऽस्य भ्रूमध्यतोऽजनि मृडो भवदेकदेशः । नामानि मे कुरु पदानि च हा विरिञ्चे - त्यादौ रुरोद किल तेन स रुद्रनामा

குருவாயூரப்பா! இப்படியாகத் தனது சொல்லை மறுத்த ஸநகர்கள் போன்றோர் மீது உண்டான கோபத்தை அடக்க ப்ரும்மா முயற்சித்தபோது, அவனுடைய புருவங்களுக்கு நடுவிலிருந்து உன்னுடைய அம்சமாக ம்ருடன் (சங்கரன்) தோன்றினான். அவன் ப்ரும்மாவிடம், “நான்முகனே! எனக்குப் பெயரையும் இடத்தையும் அளிப்பாயாக”, என்று அழத் தொடங்கினான். இதனால் அவன், “ருத்ரன்” என்ற பெயர் பெற்றான் அல்லவா?