Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 98)

Dasaka 9 - நான்முகனின் தவம்

தவைவ க்ருபயா புநஸ்ஸரஸிஜேந தேநைவ ஸ: ப்ரகல்ப்ய புவநத்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜா நிர்மிதௌ ததா வித க்ருபாபரோ குருமருத்புராதீச்வர த்வமாசு பரிபாஹிமாம் குருதயோக்ஷிதைரீக்ஷிதை: தவ ஏவ க்ருபயா புந: ஸரஸிஜேந தேந ஏவ ஸ: ப்ரகல்ப்ய புவந த்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜா நிர்மிதௌ ததா வித க்ருபாபர: குருமருத்புராதீச்வர த்வம் ஆசு பரிபாஹி மாம் குரு தயா உக்ஷிதை: ஈக்ஷிதை: तवैव कृपया पुनः सरसिजेन तेनैव स प्रकल्प्य भुवनत्रयीं प्रववृते प्रजानिर्मितौ । तथाविधकृपाभरो गुरुमरुत्पुराधीश्वर ! त्वमाशु परिपाहि मां गुरुदयोक्षितैरीक्षितैः

குருவாயூரப்பா! அந்த ப்ரும்மா உன்னுடைய தயையால் (கருணையால்), அந்தத் தாமரை மலரையே தனது ஆதாரமாகக் கொண்டு மூன்று உலகங்களையும் படைத்து, அதனைத் தொடர்ந்து ஜீவன்களையும் படைக்கத் தொடங்கினான். இப்படிப் பட்ட பல மகிமைகளை உன்னுள் கொண்டவனே! குருவாயூரப்பா! உன்னுடைய கருணையான பார்வை மூலம் என்னையும் காப்பாற்றவேண்டும்.***