Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 97)

Dasaka 9 - நான்முகனின் தவம்

சதம் க்ருத தபாஸ்தத: ஸ கலு திவ்ய ஸம்வத்ஸரான் அவாப்ய ச தபோ பலம் மதிபலம் ச பூர்வாதிகம் உதீக்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுநா பவத்பல விஜ்ரும்பித: பவந பாதாஸீ பீதவாந் சதம் க்ருத தபா: தத: ஸ கலு திவ்ய ஸம்வத்ஸரான் அவாப்ய ச தபோ பலம் மதிபலம் ச பூர்வாதிகம் உதீக்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுநா பவத் பல விஜ்ரும்பித: பவந பாதாஸீ பீதவாந் शतं कृततपास्ततः स खलु दिव्यसंवत्सरा - नवाप्य च तपोबलं मतिबलं च पूर्वाधिकम् । उदीक्ष्य किल कम्पितं पयसि पङ्कजं वायुना भवद्बलविजृम्भितः पवनपाथसी पीतवान्

குருவாயூரப்பா! இப்படியாக நீ உபதேசம் செய்த பின்னர், ப்ரும்மா மேலும் நூறு தேவ வருடம் தவம் இயற்றினான். இதனால் அதிகமான தவ வலிமையும் அதனால் முன்பைவிட அதிக ஞானத்தையும் பெற்றான். அந்த நேரம் அவன் அமர்ந்திருந்த தாமரையானது காற்றில் மெதுவாக அசைந்தது. உனது சக்தி பெற்ற ப்ரும்மா காற்றையும் நீரையும் உறிஞ்சினான்.