Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 96)
Dasaka 9 - நான்முகனின் தவம்
ஸபஸ்வ புவநத்ரயீ ரசன தக்ஷதாமக்ஷதாம் க்ருஹாண மதநுக்ரஹம் குரு தபச்ச பூயோ விதே பவத்வகில ஸாதநீ மயி ச பக்திரத்யுத்கடேத் உதீர்ய கிரமாததா: முதித சேதஸம் வேதஸம் ஸபஸ்வ புவந த்ரயீ ரசன தக்ஷதாம் அக்ஷதாம் க்ருஹாண மத் அநுக்ரஹம் குரு தப: ச பூயோ விதே பவது அகில ஸாதநீ மயி ச பக்தி: அதி உத்கடா இதி உதீர்ய கிரம ஆததா: முதித சேதஸம் வேதஸம் लभस्व भुवनत्रयीरचनदक्षतामक्षतां गृहाण मदनुग्रहं कुरु तपश्च भूयो विधे ! । भवत्वखिलसाधनी मयि च भक्तिरत्युत्कटे - त्युदीर्य गिरमादधा मुदितचेतसं वेधसम्
குருவாயூரப்பா! ப்ரும்மாவின் ப்ரார்த்தனையைக் கேட்ட நீ அவனிடம், “நான்முகனே! குறைவற்ற மூன்று உலகங்களையும் ஸ்ருஷ்டிக்கும் திறமையை நீ பெறுவாய். எனது அருளைப் பெறுவாயாக. மறுபடியும் உனது தவம் தொடங்கட்டும். என்னிடத்தில் தீவிரமாகவும் அனைத்தையும் முடிக்கும் திறனுள்ளதாகவும் விளங்கும் பக்தி உனக்கு உண்டாகக் கடவது”, என்று கூறினாய். இதனைக் கேட்ட ப்ரும்மாவை, நீ மகிழ்ச்சியில் ஆழ்த்தினாய்.