Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 95)

Dasaka 9 - நான்முகனின் தவம்

ச்ருதி ப்ரகர தர்சித ப்ரசுர வைபவ ஸ்ரீபதே ஹரே ஜய ஜய ப்ரபோ பதமுபைஷி திஷ்ட்யா த்ருசோ: குருஷ்வ தியமாசு மே புவந நிர்மிதௌ கர்மடாம் இதி த்ருஹிண வர்ணித ஸ்வகுண பம்ஹிமா பாஹிமாம் ச்ருதி ப்ரகர தர்சித ப்ரசுர வைபவ ஸ்ரீபதே ஹரே ஜய ஜய ப்ரபோ பதம் உபைஷி திஷ்ட்யா த்ருசோ: குருஷ்வ தியம் ஆசு மே புவந நிர்மிதௌ கர்மடாம் இதி த்ருஹிண வர்ணித ஸ்வகுண பம்ஹிமா பாஹிமாம் श्रुतिप्रकरदर्शितप्रचुरवैभव ! श्रीपते ! हरे ! जय जय प्रभो ! पदमुपैषि दिष्ट्या दृशोः । कुरुष्व धियमाशु मे भुवननिर्मितौ कर्मठा - मिति द्रुहिणवर्णितस्वगुणबंहिमा पाहि माम्

மஹாலக்ஷ்மியின் பதியே! குருவாயூரப்பா! உன்னைப் ப்ரும்மா, “வேதங்களால் காண்பிக்கப்பட்ட பெருமை உடையவனே! லக்ஷ்மியின் நாதனே! ஹரியே! உனக்கு ஜெயம் ஜெயம்! ப்ரபுவே! நான் செய்த புண்ணியம் நீ எனக்குத் தென்பட்டாய். இந்த உலகைப் படைப்பதற்குத் தேவையான ஞானத்தை நீ எனக்கு அளிக்க வேண்டும்”, என்று பலவாகத் துதித்தான். இப்படியாகப் ப்ரும்மாவால் துதிக்கப்பட்ட திருக்கல்யாண குணங்களை உடையவனே! குருவாயூரப்பா! என்னை நீ காக்க வேண்டும் (இந்தத் துதியானது ஸ்ரீமத்பாகவதத்தில் மூன்றாவது ஸ்கந்தம் எட்டாவது அத்யாயத்தில் உள்ளது).