Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 94)
Dasaka 9 - நான்முகனின் தவம்
க்ரீட மகுடோல்லஸத் கடக ஹார கேயூர யுக் மணிஸ்ப்புரித மேகலம் ஸுபரிவீத பீதாம்பரம் கலாய குஸுமப்ரபம் கலதலோல்லஸத் கௌஸ்துபம் வபுஸ்ததயி பாவயே கமல ஜந்மனே தர்சிதம் க்ரீட மகுட உல்லஸத் கடக ஹார கேயூர யுக் மணி ஸ்புரித மேகலம் ஸுபரிவீத பீதாம்பரம் கலாய குஸும ப்ரபம் கல தல உல்லஸத் கௌஸ்துபம் வபு: தத் அயி பாவயே கமல ஜந்மனே தர்சிதம் किरीटमुकुटोल्लसत्कटकहारकेयूरयुङ् - मणिस्फुरितमेखलं सुपरिवीतपीतांबरम् । कळायकुसुमप्रभं गळतलोल्लसत्कौस्तुभं वपुस्तदयि भावये कमलजन्मने दर्शितम्
பகவானே! குருவாயூரப்பா! ப்ரும்மா உன்னை எப்படிக் கண்டான்? க்ரீடம், மகுடம் ஆகியவை ஒளிவீசும் அழகான திருமுடி; வளையல்கள், முத்து மாலைகள், தோள் வளையல்கள் அலங்கரித்தும்; ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணமும்; நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த பொன் ஆடையும்; கழுத்தில் ப்ரகாசிக்கும் கௌஸ்துப மணியும்; காயாம்பூவின் நிறமும் உடையதான உனது திருமேனியை - தாமரையில் தோன்றி ப்ரும்மா எப்படிக் கண்டானோ அதே போல் நானும் த்யானிக்கிறேன்.