Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 93)

Dasaka 9 - நான்முகனின் தவம்

சதேந பரிவத்ஸரைர்த்ருட ஸமாதி பந்த்தோல்லஸத் ப்ரபோத விசதீக்ருத: ஸ கலு பத்மிநீ ஸம்பவ: அத்ருஷ்டசரமத்புதம் தவ ஹி ரூபமந்தர் த்ருசா வ்யசஷ்ட பரிதுஷ்டதீர் புஜக போகபாகாச்ரயம் சதேந பரிவத்ஸரை: த்ருட ஸமாதி பந்த உல்லஸத் ப்ரபோத விசதீக்ருத: ஸ கலு பத்மிநீ ஸம்பவ: அத்ருஷ்டசரம் அத்புதம் தவ ஹி ரூபம் அந்தர் த்ருசா வ்யசஷ்ட பரிதுஷ்டதீ: புஜக போகபாக ஆச்ரயம் शतेन परिवत्सरैर्दृढसमाधिबन्धोल्लसत् - प्रबोधविशदीकृतः स खलु पद्मिनीसम्भवः । अदृष्टचरमद्भुतं तव हि रूपमन्तर्दृशा व्यचष्ट परितुष्टधीर्भुजगभोगभागाश्रयम्

குருவாயூரப்பா! இப்படியாக நான்முகன், நூறு வருடம் சமாதி நிலையில் தவம் புரிந்தான். அதனால் மிகவும் தெளிவான ஞானத்தைப் பெற்றான். அதன் பின்னர் நூறு வருடமாக காணப்படாததும், வியப்பை அளிக்கக் கூடியதும், ஆதிசேஷன் மீது வீற்றிருப்பதும் ஆகிய உனது திருமேனியை தனது ஞானப்பார்வை மூலம் கண்டான். அதனால் மிகுந்த மகிழ்வு கொண்டான்.