Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 92)

Dasaka 9 - நான்முகனின் தவம்

தத: ஸகல நாலிகா விவர மார்க்க: மார்கயந் ப்ரயஸ்ய சதவத்ஸரம் கிமபி நைவ ஸந்த்ருஷ்டவாந் நிவ்ருத்ய கமலோதரே ஸுக நிஷண்ண: ஏகாக்ரதீ: ஸமாதி பலமாததே பவதநுக்ரஹை காக்ரஹீ தத: ஸகல நாலிகா விவர மார்க்க: மார்கயந் ப்ரயஸ்ய சத வத்ஸரம் கிம் அபி நஏவ ஸந்த்ருஷ்டவாந் நிவ்ருத்ய கமல உதரே ஸுக நிஷண்ண: ஏகாக்ரதீ: ஸமாதி பலம் ஆததே பவத் அநுக்ரஹ ஏக ஆக்ரஹீ ततस्सकलनाळिकाविवरमार्गगो मार्गयन् प्रयस्य शतवत्सरं किमपि नैव संदृष्टवान् । निवृत्य कमलोदरे सुखनिषण्ण एकाग्रधीः समाधिबलमादधे भवदनुग्रहैकाग्रही

குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்தத் தண்டில் உள்ள பல த்வாரங்களிலும் நுழைந்து நூறு வருடம் உன்னைத் தேடினான். அவனுக்கு எதுவும் புலப்படவில்லை. பின்னர் தேடுதல் முயற்சியைக் கைவிட்டு, அந்த மலரின் மீது சுகமாக அமர்ந்து, உன்னுடைய அனுக்ரஹத்தைப் பெற விரும்பி, தன் மனதை ஒருமைப்படுத்தி, ஸமாதி நிலையில் அமர்ந்தான்.