Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 91)

Dasaka 9 - நான்முகனின் தவம்

அமுஷ்ய ஹி ஸரோருஹ: கிமபி காரணம் ஸம்பவேத் இதி ஸ்ம க்ருத நிச்சயஸ்ஸ கலு நாலரந்த்ராத்வநா ஸ்வயோக பல வித்யயா ஸமவரூடவாந் ப்ரௌடதீ: த்வதீயமதிமோஹனம் ந து கலேவரம் த்ருஷ்டவாந் அமுஷ்ய ஹி ஸரோருஹ: கிம் அபி காரணம் ஸம்பவேத் இதி ஸ்ம க்ருத நிச்சய: ஸ கலு நால ரந்த்ர அத்வநா ஸ்வ யோக பல வித்யயா ஸமவரூடவாந் ப்ரௌடதீ: த்வதீயம் அதிமோஹனம் ந து கலேவரம் த்ருஷ்டவாந் अमुष्य हि सरोरुहः किमपि कारणं सम्भवे - दितिस्म कृतनिश्चयः स खलु नालरन्ध्राध्वना । स्वयोगबलविद्यया समवरूढवान् प्रौढधीः त्वदीयमतिमोहनं न तु कळेबरं दृष्टवान्

குருவாயூரப்பா! மிகுந்த அறிவு கொண்டவனாக உன்னால் உருவாக்கப்பட்ட ப்ரும்மா, அந்தத் தாமரை மலர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு காரணப் பொருள் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். தனது யோக சக்தியாலும், ஞானத்தாலும் அந்தத் தாமரை மலரின் தண்டில் உள்ள த்வாரம் வழியாக கீழே சென்றான். இருந்தாலும் உன்னுடைய அழகான திருமேனி அவனுக்கு புலப்படவில்லை.