Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 90)
Dasaka 9 - நான்முகனின் தவம்
மஹார்ணவ விகூர்ணிதம் கமலமேவ தத் கேவலம் விலோக்ய ததுபாச்ரயம் தவ தநும் து நாலோகயன் க ஏஷ கமலோதரே மஹதி நிஸ்ஸஹாயோஹ்யஹம் குத: ஸவிதிதமம்புஜம் ஸமஜநீதி சிந்தாமகாத் மஹார்ணவ விகூர்ணிதம் கமலமேவ தத் கேவலம் விலோக்ய தத் உபாச்ரயம் தவ தநும் து ந ஆலோகயன் க ஏஷ கமலோதரே மஹதி நிஸ்ஸஹாய: ஹி அஹம் குத: ஸவித் இதம் அம்புஜம் ஸமஜநி இதி சிந்தாம் அகாத் महार्णवविघूर्णितं कमलमेव तत्केवलं विलोक्य तदुपाश्रयं तव तनुं तु नालोकयन् । क एष कमलोदरे महति निस्सहायो ह्यहं कुतः स्विदिदमम्बुजं समजनीति चिन्तामगात्
குருவாயூரப்பா! அத்தனை பெரிய ஸமுத்ரத்தில், அந்தத் தாமரைமலர் மட்டும் தனியாக அசைவதைக் கண்ட ப்ரும்மா, அந்தத் தாமரைக்கு ஆதாரமாக இருந்த உனது திருமேனியைக் காண முடியவில்லை. அப்போது ப்ரும்மா, “இத்தனை பெரிய தாமரையில் தனியாக அமர்ந்துள்ள நான் யார்? இந்த மலர் எங்கிருந்து உருவானது?” என்று சிந்திக்கத் தொடங்கினான்.