Sriman Narayaneeyam - Dasaka 9 - நான்முகனின் தவம் (ச்லோகம் 89)

Dasaka 9 - நான்முகனின் தவம்

ஸ்திதஸ்ஸ கமலோத்பவ: தவ ஹி நாபி பங்கேருஹே குத: ஸ்விதிதமம்புதாவுதிதமித்யநாலோகயன் ததீக்ஷண குதூஹலாத் ப்ரதிதிசம் விவ்ருத்தாநந: சதுர்வதநதாமகாத் விகஸதஷ்ட த்ருஷ்ட்யம்புஜாம் ஸ்தித: ஸ கமலோத்பவ: தவ ஹி நாபி பங்கேருஹே குத: ஸ்வித் இதம் அம்புதௌ உதிதம் இதி அநாலோகயன் தத் ஈக்ஷண குதூஹலாத் ப்ரதிதிசம் விவ்ருத்த ஆநந: சது: வதநதாம் அகாத் விகஸத் அஷ்ட த்ருஷ்ட்டி அம்புஜாம் स्थितस्स कमलोद्भवस्तव हि नाभिपङ्केरुहे कुतः स्विदिदमम्बुधावुदितमित्यनालोकायन् । तदीक्षणकुतूहलात् प्रत्तिदिशं विवृत्तानन - श्चतुर्वदनतामगाद्विकसदृष्टदृष्ट्यम्बुजाम्

குருவாயூரப்பா! உன்னுடைய திருநாபிக்கமலத்தில் தோன்றிய ப்ரும்மா, தான் அமர்ந்துள்ள அந்த தாமரைமலர், இந்த ஸமுத்திரத்தில் எந்த இடத்தில் இருந்து தோன்றியது என்று வியப்படைந்தான். அதற்காக ஒவ்வொரு திசையாக தனது பார்வையைத் திருப்பினான். அவ்வாறு தனது தலையை ஒவ்வொரு திசையில் திருப்பும்போதும் ஒவ்வொரு தலையைப் பெற்று, இப்படியாக நான்கு தலையையும், எட்டு கண்களையும் பெற்றான் (விளக்கம் காண்க).

ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தம், எட்டாம் அத்யாயம், ச்லோகம் 16 தொடங்கி, மூன்றாம் ஸ்கந்தம் ஒன்பதாம் அத்யாயம் ச்லோகம் 9 முடிய இந்த தசகத்தில் கூறப்பட்டுள்ளது.