Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 87)
Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்
ஸம்புல்ல பத்ரே நிதராம் விசித்ரே தஸ்மிந் பவத் வீர்ய த்ருதே ஸரோஜே ஸ பத்ம ஜந்மா விதிராவிராஸீத் ஸ்வயம் ப்ரபுத்தா கிலவேத ராசி: ஸம்புல்ல பத்ரே நிதராம் விசித்ரே தஸ்மிந் பவத் வீர்ய த்ருதே ஸரோஜே ஸ பத்ம ஜந்மா விதி: ஆவிராஸீத் ஸ்வயம் ப்ரபுத்த அகில வேத ராசி: संफुल्लपत्रे नितरां विचित्रे तस्मिन् भवद्वीर्यधृते सरोजे । स पद्मजन्मा विधिराविरासीत् स्वयंप्रबुद्धाखिलवेदराशिः
குருவாயூரப்பா! நன்றாக மலர்ந்த இதழ்களை உடையதும், வியப்பை அளிக்கக் கூடியதாகவும், உனது சக்தியால் விளங்கிக் கொண்டுள்ளதாகவும் காணப்பட்ட அந்தத் தாமரைமலரின் மீது - அனைத்து வேதங்களும் (உன் அனுக்ரஹத்தால்) தானாகவே நினைவுக்கு வந்தவனாக பத்மஜன் என்று பெயர் கொண்ட ப்ரும்மா (நான்முகன்) தோன்றினான்.