Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 84)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

விபுத்ய ச த்வம் ஜலகர்ப்ப சாயிந் விலோக்ய லோகாநகிலான் ப்ரலீநான் தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்மதயா நிஜாந்த: ஸ்திதேஷு விச்வேஷு ததாத த்ருஷ்டிம் விபுத்ய ச த்வம் ஜல கர்ப்ப சாயிந் விலோக்ய லோகாந் அகிலான் ப்ரலீநான் தேஷு ஏவ ஸூக்ஷ்ம ஆத்மதயா நிஜாந்த: ஸ்திதேஷு விச்வேஷு ததாத த்ருஷ்டிம் विबुध्य च त्वं जलगर्भशायिन् ! विलोक्य लोकानखिलान्प्रलीनान् । तेष्वेव सूक्ष्मात्मतया निजान्तः स्थितेषु विश्वेषु ददाथ दृष्टिम्

குருவாயூரப்பா! ப்ரளயத்தின்போது நீ நீரில் சயனம் கொண்டிருந்தாய். நீ விழித்து எழுந்தபோது அனைத்து உலகங்களும் உன்னிடம் மறைந்துள்ளதைக் கண்டாய். உன் உள்ளே மறைந்திருந்த அவற்றின் மீது உனது கனிவான பார்வையை நீ செலுத்தினாய் அல்லவோ?