Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 83)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

சதுர்யுகாணாம் ச ஸஹஸ்ரமேவம் த்வயி ப்ரஸுப்தே புநரத்விதீயே காலாக்ய சக்தி: ப்ரதம ப்ரபுத்தா ப்ராபோதயத் த்வாம் கில விச்வநாத சதுர்யுகாணாம் ச ஸஹஸ்ரமேவம் த்வயி ப்ரஸுப்தே புந: அத்விதீயே காலாக்ய சக்தி: ப்ரதம ப்ரபுத்தா ப்ராபோதயத் த்வாம் கில விச்வநாத चतुर्युगाणां च सहस्रमेवं त्वयि प्रसुप्ते पुनरद्वितीये । कालाख्यशक्तिः प्रथमप्रबुद्धा प्राबोधयत्त्वां किल विश्वनाथ !

விச்வத்திற்கு (உலகிற்கு) நாயகனே! குருவாயூரப்பா! ஆயிரம் சதுர்யுகங்கள் இப்படியாகக் கடந்தன. அதன் பின்னர் கால சக்தியானது விழித்துக் கொண்டது. அப்போது நீ மட்டுமே தனித்து உறங்கிக் கொண்டிருந்தாய். அந்த நேரம் கால சக்தி உன்னை எழுப்பியது அல்லவா?