Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 80)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

திநாவஸாநேSத ஸரோஜ யோநி: ஸுஷுப்திகாமஸ்த்வயி ஸந்நிலில்யே ஜகந்தி ச த்வஜ்ஜடரம் ஸமீயு: ததேதமேகார்ணவமாஸ விச்வம் திந அவஸாநே அத ஸரோஜ யோநி: ஸுஷுப்தி காம: த்வயி ஸந்நிலில்யே ஜகந்தி ச த்வத் ஜடரம் ஸமீயு: தத் இதம் ஏகார்ணவம் ஆஸ விச்வம் दिनावसानेऽथ सरोजयोनिः सुषुप्तिकामस्त्वयि सन्निलिल्ये । जगन्ति च त्वज्जठरं समीयु - स्तदेदमेकार्णवमास विश्वम्

குருவாயூரப்பா! ப்ரும்மா தனது ஒரு நாள் பகலை முடித்துக் கொண்ட பின்னர் தூக்கத்தை விரும்பியவனாய் உன்னிடம் இணைந்தான். அந்த நேரத்தில் மூன்று உலகங்களும் உன்னுடைய வயிற்றில் ஒடுங்கின. இப்படியாக இந்த உலகம் முழுவதும் ஒரே ஸமுத்திரமாக மாறியது.