Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 79)
Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்
பஞ்சாசதப்தமதுநா ஸ்வ வயோர்த ரூபம் ஏகம் பரார்தமதிவ்ருத்ய ஹி வர்த்ததேSஸௌ தத்ராந்த்ய ராத்ரி ஜநிதாந் கதயாமி பூமன் பச்சாத் திநாவதரணே ச பவத் விலாஸான் பஞ்சாசத் அப்தம் அதுநா ஸ்வ வய: அர்த ரூபம் ஏகம் பரார்தம் அதிவ்ருத்ய ஹி வர்த்ததே அஸௌ தத்ர அந்த்ய ராத்ரி ஜநிதாந் கதயாமி பூமன் பச்சாத் திந அவதரணே ச பவத் விலாஸான் पञ्चाशदब्दमधुना स्ववयोऽर्धरूप - मेकं परार्धमतिवृत्य हि वर्ततेऽसौ । तत्रान्त्यरात्रिजनितान् कथयामि भूमन् ! पश्चाद्दिनावतरणे च भवद्विलासान्
குருவாயூரப்பா! தற்போது ப்ரும்மா தன்னுடைய ஆயுளில் ஐம்பது வருடத்தைக் கழித்துள்ளான். இந்த ஐம்பது வருடம் என்பது ஒரு பரார்த்த காலம் எனப்படும். இத்தகைய பரார்த்த காலத்தில், கடைசி இரவில் நிகழ்ந்தவற்றையும், அடுத்த நாள் காலையில் நிகழ்ந்தவற்றையும் கூறுகிறேன். என்ன நிகழ்ந்தன? அவை உனது லீலைகளே ஆகும்.