Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 78)
Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்
அஸ்மாத்ருசாம் புநரஹர்முக க்ருத்ய துல்யாம் ஸ்ருஷ்டிம் கரோத்யநுதினம் ஸ பவத்ப்ரஸாதாத் ப்ராக் ப்ராஹ்ம கல்ப ஜநுஷாம் ச பராயுஷாம் து ஸுப்த ப்ரபோதந ஸமாஸ்தி ததாSபி ஸ்ருஷ்டி: அஸ்மாத்ருசாம் புந: அஹ: முக க்ருத்ய துல்யாம் ஸ்ருஷ்டிம் கரோதி அநுதினம் ஸ பவத் ப்ரஸாதாத் ப்ராக் ப்ராஹ்ம கல்ப ஜநுஷாம் ச பர ஆயுஷாம் து ஸுப்த ப்ரபோதந ஸமா அஸ்தி ததா அபி ஸ்ருஷ்டி: अस्मादृशां पुनरहर्मुखकृत्यतुल्यां सृष्टिं करोत्यनुदिनं स भवत्प्रसादात् । प्राग्ब्रह्मकल्पजनुषां च परायुषां तु सुप्तप्रबोधनसमाऽस्ति तदाऽपि सृष्टिः
குருவாயூரப்பா! உன்னுடைய அநுக்ரஹத்தால் மட்டுமே ப்ரும்மா தினமும் எங்களைப் போன்றோர் செய்யும் காலைக்கடன்கள் போல், தனது ஸ்ருஷ்டி என்னும் செயலைப் புரிகிறான். முந்தைய கல்பத்தில் பல சிரஞ்ஜீவிகள் (சாகாவரம் பெற்றவர்கள்) வாழ்ந்திருக்கக்கூடும். அவர்களுக்கு இந்த ஸ்ருஷ்டி என்பது உறங்கி எழுவது போன்றது ஆகும். (சிரஞ்சீவிகள் = அசுவத்தாமன், மஹாபலி, அனுமன், விபீஷணன், க்ருபாச்சார்யன், பரசுராமன் போன்றவர்கள்)