Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 77)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

ஸோSயம் சதுர்யுக ஸஹஸ்ரமிதாந்யஹாநி தாவந்மிதாச்ச ரஜநீர்பஹுசோ நிநாய நித்ராத்யஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டை: நைமித்திக ப்ரளயமாஹுரதோஸ்ய ராத்ரிம் ஸ: அயம் சதுர்யுக ஸஹஸ்ர மிதாநி அஹாநி தாவத் மிதா: ச ரஜநீ: பஹுச: நிநாய நித்ராதி அஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டை: நைமித்திக ப்ரளயம் ஆஹு: அத: அஸ்ய ராத்ரிம் सोऽयं चतुर्युगसहस्रमितान्यहानि तावन्मिताश्च रजनीर्बहुशो निनाय । निद्रात्यसौ त्वयि निलीय समं स्वसृष्टैर् नैमित्तिकप्रळयमाहुरतोऽस्य रात्रिम्

குருவாயூரப்பா! ப்ரும்மா ஆயிரம் சதுர்யுகங்களைத் தனது பகலாகவும், ஆயிரம் சதுர்யுகங்களைத் தனது இரவாகவும் அளித்தான் (நமது ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களின் பன்னிரண்டாயிரம் நாள்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும். ஆக, இரண்டு ஆயிரம் சதுர்யுகங்கள் சேர்ந்தது ப்ரும்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.) ப்ரும்மா உறங்கும்போது, தான் உண்டாக்கிய அனைத்தையும் தன்னிடத்தில் இணைத்தே உறங்குகிறான். ஆக, ப்ரும்மாவின் இரவு என்பதே நைமித்திகப் ப்ரளயம் ஆகும்.