Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 76)
Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்
ஏவம் தாவத் ப்ராக்ருத ப்ரக்ஷயாந்தே ப்ராஹ்மே கல்பேஹ்யாதிமே லப்த ஜன்மா ப்ரஹ்மா பூயஸ்த்வத்த ஏவாப்ய வேதாந் ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வ கல்போபமாநாம் ஏவம் தாவத் ப்ராக்ருத ப்ரக்ஷய அந்தே ப்ராஹ்மே கல்பே ஹி ஆதிமே லப்த ஜந்மா ப்ரஹ்மா பூய: த்வத்த ஏவ ஆப்ய வேதாந் ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வ கல்ப உபமாநாம் एवं तावत्प्राकृतप्रक्षयान्ते ब्राह्मे कल्पे ह्यादिमे लब्धजन्मा । ब्रह्मा भूयस्त्वत्त एवाप्य वेदान् सृष्टिं चक्रे पूर्वकल्पोपमानाम्
குருவாயூரப்பா! இப்படியாக ப்ராக்ருத ப்ரளயம் என்பது முடிந்த பின்னர் (காலத்தின் முடிவு என்பது நித்தியப் ப்ரளயம்; ஸங்கர்ஷணனாகிய பகவான் முகத்தில் இருந்து தோன்றும் அக்னியானது அனைத்தையும் அழிப்பது நைமித்திகப் ப்ரளயம்; ஸத்வ, ரஜோ, தமஸ் குணங்கள் ஒன்றிவிடுவது ப்ராக்ருதப் ப்ரளயம்) முதலில் தோன்றும் ப்ரம்ம கல்பம் என்ற காலத்தில் ப்ரும்மா (நான்முகன்) தோன்றினான். அவன் உன்னிடம் இருந்து வேதங்களைக் கற்று, மீண்டும் முந்தைய கல்பத்தில் எவ்வாறு காணப்பட்டதோ அவ்விதமே ஸ்ருஷ்டியைத் துவக்கினான் (விளக்கம் காண்க).
ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தம், எட்டாம் அத்யாயம், ச்லோகங்கள் 10 முதல் 15 முடிய இந்த தசகத்தில் கூறப்பட்டுள்ளது.