Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 75)

Dasaka 7 - நான்முகனின் தோற்றம்

ஆதாம்ரே சரணே விநம்ரமத தம் ஹஸ்தேந ஹஸ்தே ஸ்ப்ருஸந் போதஸ்தே பவிதா ந ஸர்க்க விதிபிர்பந்தோSபி ஸஞ்ஜாயதே இத்யாபாஷ்ய கிரம் ப்ரதோஷ்ய நிரதாம் தச்சித்த கூட: ஸ்வயம் ஸ்ருஷ்டௌ தம் ஸமுதைரய: ஸ பகவந்நுல்லாஸயோல்லாகதாம் ஆதாம்ரே சரணே விநம்ரம் அத தம் ஹஸ்தேந ஹஸ்தே ஸ்ப்ருஸந் போத: தே பவிதா ந ஸர்க்க விதிபி: பந்த: அபி ஸஞ்ஜாயதே இதி ஆபாஷ்ய கிரம் ப்ரதோஷ்ய நிரதாம் தச் சித்த கூட: ஸ்வயம் ஸ்ருஷ்டௌ தம் ஸமுதைரய: ஸ பகவந் உல்லாஸய உல்லாகதாம் आताम्रे चरणे विनम्रमथ तं हस्तेन हस्ते स्पृशन् बोधस्ते भविता न सर्गविधिबिर्बन्धोऽपि सञ्जायते। इत्याभाष्य गिरं प्रतोष्य नितरां तच्चित्तगूढः स्वयं सृष्टौ तं समुदैरयस्स भगवन्नुल्लासयोल्लाघताम्

பகவானே! குருவாயூரப்பா! உன்னை கண்ட ப்ரும்மா, சிவந்த உனது திருவடிகளில் விழுந்து வணங்கினான். அப்படி வணங்கியவுடன், நீ உனது திருக்கரத்தால் ப்ரும்மாவின் கரத்தைப் பிடித்து, “உனக்கு அந்த ஞானம் ஏற்படும். மேலும் ஸ்ருஷ்டி மூலம் உண்டாகும் ஸம்ஸார பந்தம் உனக்கு உண்டாகாது”, என்ற சொற்களைக் கூறி அவனை மிகவும் மகிழ்வு கொள்ளச்செய்தாய். அது மட்டும் அல்லாமல் நீ அவனுடைய மனதில் புகுந்து அவனை ஸ்ருஷ்டியில் ஈடுபடத் தூண்டினாய். இப்படிப்பட்ட நீ எனக்கு நல்ல ஆரோக்யம் அளிப்பாயாக.***