Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 74)

Dasaka 7 - நான்முகனின் தோற்றம்

த்ருஷ்ட்வா ஸம்ப்ருத ஸம்ப்ரம: கமலபூஸ்த்வத் பாத பாதோருஹே ஹர்ஷாவேச வசம்வத: நிபதித; ப்ரீத்யா க்ருதார்த்தீபவந் ஜாநாஸ்யேவ மநீஷிதம் மம விபோ ஜ்ஞாநம் ததாபாதய த்வைதாத்வைத பவத் ஸ்வரூப பரமித்யாசஷ்ட தம் த்வாம் பஜே த்ருஷ்ட்வா ஸம்ப்ருத ஸம்ப்ரம: கமலபூ: த்வத் பாத பாதோருஹே ஹர்ஷ ஆவேச வசம்வத: நிபதித: ப்ரீத்யா க்ருதார்த்தீ பவந் ஜாநாஸி ஏவ மநீஷிதம் மம விபோ ஜ்ஞாநம் தத் ஆபாதய த்வைத அத்வைத பவத் ஸ்வரூப பரம இதி ஆசஷ்ட தம் த்வாம் பஜே दृष्ट्वा संभृतसंभ्रमः कमलभूस्त्वत्पादपाथोरुहे हर्षावेशवशंवदो निपतितः प्रीत्या कृतार्थीभवन् । जानास्येव मनीषितं मम विभो ज्ञानं तदापादय द्वैताद्वैतभवत्स्वरूपपरमित्याचष्ट तं त्वां भजे

அனைத்து இடத்திலும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! இப்படியாக உனது திருமேனி எழிலைக் கண்டு, தாமரை மலரில் அமர்ந்த நான்முகன் பரவசமும் பரபரப்பும் அடைந்தான். மிகுந்த ஆனந்தத்தில் மூழ்கினான். உன்னுடைய திருவடிகளான தாமரைகளில் விழுந்தான். உன்னிடம் அவன் மிகுந்த பக்தியுடன், “குருவாயூரப்பா! என்னுடைய எண்ணத்தை நீ அறிவாய். த்வைதமாகவும் அத்வைதமாகவும் காணப்படும் உனது திருமேனி குறித்த ஞானத்தை நீ அளிக்கவேண்டும்”, என்று வேண்டி நின்றான் அல்லவா? நானும் அப்படியே வணங்குகிறேன்.