Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 73)

Dasaka 7 - நான்முகனின் தோற்றம்

காலாம்போத கலாய கோமலருசீ சக்ரேண சக்ரம் திசாம் ஆவ்ருண்வாநமுதார மந்த ஹஸிதஸ்யந்த ப்ரஸந்நானனம் ராஜத் கம்பு கதாரி பங்கஜதர ஸ்ரீமத் புஜாமண்டலம் ஸ்ரஷ்டு: துஷ்டிகரம் வபுஸ்தவ விபோ மத்ரோகமுத்வாஸயேத் கால அம்போத கலாய கோமல ருசீ சக்ரேண சக்ரம் திசாம் ஆவ்ருண்வாநம் உதார மந்த ஹஸித ஸ்யந்த ப்ரஸந்ந ஆனனம் ராஜத் கம்பு கதா அரி பங்கஜ தர ஸ்ரீமத் புஜாமண்டலம் ஸ்ரஷ்டு: துஷ்டிகரம் வபு: தவ விபோ மத் ரோகம் உத்வாஸயேத் कालाम्भोद कलायकोमलरुचीचक्रेण चक्रं दिशा - मावृण्वानमुदारमन्दहसितस्यन्दप्रसन्नाननम् । राजत्कम्बुगदारिपङ्कजधर श्रीमद्भुजामण्डलं स्रष्टुस्तुष्टिकरं वपुस्तव विभो ! मद्रोगमुद्वासयेत्

எங்கும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! மழை நீரைக் கொண்ட கார்மேகத்தையும், காயாம்பூவையும் ஒத்த நிறமுடைய அழகான உனது திருமேனி அனைத்துத் திசைகளிலும் தனது ஒளியை வீசியபடி உள்ளது; உன்னுடைய கனிவான திருமுகத்தில் தவழ்கின்ற கம்பீரமும் அழகும் இணைந்த மந்தஹாசப் புன்னகை முகத்திற்கு மேலும் அழகு கூட்டுகிறது; உனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவை உள்ளன. இவற்றைக் கொண்டுள்ள புஜங்கள் அழகாக உள்ளன; இத்தகைய திருமேனியானது ப்ரும்மா மனம் மகிழும் வண்ணம் இருந்தது. இந்தத் தோற்றம் எனது வியாதிகளை நீக்க வேண்டும்.