Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 72)
Dasaka 7 - நான்முகனின் தோற்றம்
தத்ரைவம் ப்ரதி தர்சிதே நிஜபதே ரத்நாஸனாத்யாஸிதம் பாஸ்வத் கோடி லஸத் க்ரீட கடகாத்யாகல்பதீ ப்ராக்ருதி ஸ்ரீவத்ஸாங்கிதமாத்த கௌஸ்துபமணிச்சாயாருணம் காரணம் விச்வேஷாம் தவ ரூபமைக்ஷத விதிஸ்தத்தே விபோ பாது மே தத்ர ஏவம் ப்ரதி தர்சிதே நிஜபதே ரத்ந ஆஸன ஆத்யாஸிதம் பாஸ்வத் கோடி லஸத் க்ரீட கடகாதி ஆகல்ப தீப்ர ஆக்ருதி ஸ்ரீவத்ஸ அங்கிதம் ஆத்த கௌஸ்துபமணி சாயா அருணம் காரணம் விச்வேஷாம் தவ ரூபம் ஐக்ஷத விதி: தத் தே விபோ பாது மே तत्रैवं प्रतिदर्शिते निजपदे रत्नासनाध्यासितं भास्वत्कोटिलसत्किरीटकटकाद्याकल्पदीपाकृति । श्रीवत्साङ्कितमात्तकौस्तुभमणिच्छायारुणं कारणं विश्वेषां तव रूपमैक्षत विधिस्तत्ते विभो ! भातु मे
குருவாயூரப்பா! இப்படியாக உனது வைகுண்டத்தை நீ ப்ரும்மாவுக்குக் காண்பித்தாய்! அங்கு உன்னை ப்ரம்மன் எப்படிக் கண்டான்? நீ இரத்னங்களால் அமைக்கப்பட்ட ஆசனத்தில் இருந்தாய். பலகோடி சூரியன்கள் ஒன்றாக இணைந்தால் உண்டாகும் ப்ரகாசம் போன்று ஒளி வீசும் க்ரீடம், தோள் வளையல்கள் போன்ற ஆபரணங்களை அணிந்திருந்தாய்; ஸ்ரீவத்ஸம் என்ற மருவும், கௌஸ்துப மணியும் கொண்டிருந்தாய். இப்படியான உனது திருமேனி எழிலைப் ப்ரும்மா கண்டான். ப்ரும்மா கண்டு ரசித்த அந்த ரூபமானது எனக்கும் தென்படவேண்டும். (குறிப்பு - இங்கு ஆசனத்தில் இருந்தாய். கொண்டிருந்தாய் போன்ற பதங்கள், வரிகளின் முழுமைக்காக எழுதப்பட்டனவே அன்றி அவை மூலத்தில் இல்லை).