Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 71)
Dasaka 7 - நான்முகனின் தோற்றம்
நாநா திவ்ய வதூஜனைரபிவ்ருதா வித்யுல்லதா துல்யயா விச்வோந்மாதந ஹ்ருத்ய காத்ரலதயா வித்யோதிதா சாந்தரா த்வத் பாதாம்புஜ ஸௌரபைக குதுகால்லக்ஷ்மீ: ஸ்வயம் லக்ஷ்யதே யஸ்மிந் விஸ்மயநீய திவ்ய விபவம் தத்தே பதம் தேஹி மே நாநா திவ்ய வதூ ஜநை: அபிவ்ருதா வித்யுத் லதா துல்யயா விச்வ உந்மாதந ஹ்ருத்ய காத்ர லதயா வித்யோதித ஆசாந்தரா த்வத் பாதாம்புஜ ஸௌரபைக குதுகாத் லக்ஷ்மீ: ஸ்வயம் லக்ஷ்யதே யஸ்மிந் விஸ்மயநீய திவ்ய விபவம் தத் தே பதம் தேஹி மே नानादिव्यवधूजनैरभिवृता विद्युल्लतातुल्यया विश्वोन्मादनहृद्यगात्रलतया विद्योतिताशान्तरा । त्वत्पादांबुजसौरभैककुतुकाल्लक्ष्मीः स्वयं लक्ष्यते यस्मिन् विस्मयनीयदिव्यविभवं तत्ते पदं देहि मे
குருவாயூரப்பா! அந்த லோகத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். அவள் எப்படி உள்ளாள்? தேவப்பெண்கள் பலரும் அவளைச் சூழ்ந்து உள்ளனர். மின்னலைப் போன்று மெல்லியவளாக அனைத்து மக்களையும் கவர்ந்து இழுப்பவளாக உள்ளாள்; அனைத்து திசைகளையும் ஒளியுடையதாகச் செய்பவளாக உள்ளாள்; அதிசயிக்கத்தக்க திருமேனி கொண்டவளாக உள்ளாள்; உனது திருவடித்தாமரைகளின் வாசனையை எப்போதும் முகர்ந்தபடி இருக்க விருப்பப்பட்டு உள்ளாள். இத்தகைய இடமான உனது ஸ்ரீவைகுண்ட பதவியை எனக்கும் தர வேண்டும்.