Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 70)
Dasaka 7 - நான்முகனின் தோற்றம்
யஸ்மிந்நாம சதுர்புஜா ஹரிமணி ச்யாமாவதாதத்விஷ: நாநா பூஷண ரத்ன தீபித திசோ ராஜத்விமானாலயா: பக்தி ப்ராப்த ததாவிதோந்நதபதா: தீவ்யந்தி திவ்யா: ஜநா: தத் தே தாம நிரஸ்த ஸர்வசமலம் வைகுண்ட ரூபம் ஜயேத் யஸ்மிந் நாம சதுர்புஜா ஹரி மணி ச்யாமா அவதாதத்விஷ: நாநா பூஷண ரத்ந தீபித திச: ராஜத் விமாந ஆலயா: பக்தி ப்ராப்த ததா வித உன்னத பதா: தீவ்யந்தி திவ்யா: ஜனா: தத் தே தாம நிரஸ்த ஸர்வ சமலம் வைகுண்ட ரூபம் ஜயேத் यस्मिन्नाम चतुर्भुजा हरिमणिश्यामावदातत्विषो नानाभूषणरत्नदीपितदिशो राजद्विमानालयाः । भक्तिप्राप्ततथाविधोन्नतपदा दीव्यन्ति दिव्या जना - स्तत्ते धाम निरस्तसर्वशमलं वैकुण्ठरूपं जयेत्
குருவாயூரப்பா! அந்த லோகத்தில் உள்ளவர்கள் நான்கு கரங்களை உடையவர்கள்; அவர்கள் இந்திரநீலம் போன்று உள்ளவர்கள்; கண்ணைக் கவர்கின்ற ஆபரணங்களையும், இரத்தினங்களையும் அணிந்து, அதனால் அனைத்துத் திசைகளிலும் ஒளி வீசுபவர்கள்; ஒளி பொருந்திய விமானங்களில் (மாளிகை என்று கொள்ளலாம்) வசிப்பவர்கள்; அவர்கள் தெய்வீகமும் பக்தியும் பொருந்தியவர்கள் ஆவர். அவர்கள் தங்கள் பக்தியின் விளைவாக இப்படியாகப் ப்ரகாசமாக உள்ளனர். இப்படிப்பட்டவர்கள் உள்ள இடமும் பாவங்கள் நீங்கப்பட்ட இடமும் ஆகிய உனது ஸ்ரீவைகுண்டம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்.