Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 68)
Dasaka 7 - நான்முகனின் தோற்றம்
கோSஸௌ மாமவதத் புமாநிதி ஜலாபூர்ணே ஜகன்மண்டலே திக்ஷு உத்வீக்ஷ்ய கிமப்யநீக்ஷிதவதா வாக்யார்த்தமுத்பச்யதா திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரமாத்த தபஸா தேன த்வமாராதித: தஸ்மை தர்ஸிதவானஸி ஸ்வநிலயம் வைகுண்டமேகாத்புதம் க: அஸௌ மாம் அவதத் புமாந் இதி ஜல அபூர்ணே ஜகன்மண்டலே திக்ஷு உத்வீக்ஷ்ய கிம் அபி அநீக்ஷிதவதா வாக்ய அர்த்தம் உத்பச்யதா திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரம் ஆத்த தபஸா தேன த்வம் ஆராதித: தஸ்மை தர்ஸிதவாந் அஸி ஸ்வ நிலயம் வைகுண்டம் ஏகாத்புதம் कोऽसौ मामवदत्पुमानिति जलापूर्णे जगन्मण्डले दिक्षूद्वीक्ष्य किमप्यनीक्षितवता वाक्यार्थमुत्पश्यता । दिव्यं वर्षसहस्रमात्तपसा तेन त्वमाराधित - स्तस्मै दर्शितवानसि स्वनिलयं वैकुण्ठमेकाद्भुतम्
குருவாயூரப்பா! நீ அசரீரியாகக் கூறியபோது உலகம் முழுவதும் நீரினால் நிரம்பியிருந்தது. இப்படி இருந்தும் தன்னை நோக்கி இவ்விதமாகக் கூறிய புருஷன் யார் என்று நான்முகன் அனைத்துத் திசைகளிலும் நோக்கினான். யாரையும் பார்க்க இயலவில்லை. இருந்தாலும் தனக்குக் கேட்ட அந்த அசரீரி வாக்கின் உட்பொருளை உணர்ந்த நான்முகன் உன்னைக் குறித்து ஆயிரம் தேவ வருடம் தவம் இயற்றினான். அப்படிப்பட்ட நான்முகனுக்காக, காண்பதற்கே வியப்பாக இருக்கின்ற உன்னுடைய இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை அவனுக்குக் காண்பித்தாய் அல்லவா?