Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 67)
Dasaka 7 - நான்முகனின் தோற்றம்
ஸோSயம் விச்வ விஸர்க தத்த ஹ்ருதய: ஸம்பச்ய மாந: ஸ்வயம் போதம் கல்வனாப்ய விச்வ விஷயம் சிந்தாகுலஸ்தஸ்திவான் தாவத் த்வம் ஜகதாம்பதே தப தப இத்யேவம் ஹி வைஹாயஸீம் வாணீமேனமசிச்ரவ: ச்ருதி ஸுகாம் குர்வம்ஸ்தப: ப்ரேரணாம் ஸ: அயம் விச்வ விஸர்க தத்த ஹ்ருதய: ஸம்பச்ய மாந: ஸ்வயம் போதம் கலு அவனாப்ய விச்வ விஷயம் சிந்தா ஆகுல: தஸ்திவான் தாவத் த்வம் ஜகதாம் பதே தப தப இதி ஏவம் ஹி வைஹாயஸீம் வாணீம் ஏனம் அசிச்ரவ: ச்ருதி ஸுகாம் குர்வன் தப: ப்ரேரணாம் सोऽयं विश्विसर्गदत्तहृदयस्सम्पश्यमानः स्वयं बोधं खल्वनवाप्य विश्वविषयं चिन्ताकुलस्तस्थिवान् । तावत् त्वं जगतांपते ! तप तपेत्येवं हि वैहायसीं वाणीमेनमशिश्रवः श्रुतिसुखां कुर्वंस्तपःप्रेरणाम्
குருவாயூரப்பா! இப்படியாக ஸ்ருஷ்டி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதைப் பற்றி நன்றாக ஆராய்ந்து பார்த்தும், இந்த ஸ்ருஷ்டியைக் குறித்த தெளிவான ஒரு முடிவுக்கு நான்முகனால் வர இயலவில்லை. இதனால் மிகவும் மனக்கவலை கொண்டான். இந்த ஜகத்தின் நாதனே! அப்போது நீ அவனது காதுக்கு இனிமை அளிக்கும்படியாக “தவம் புரிவாயாக, தவம் புரிவாயாக” என்று அசரீரி வாக்காகக் கூறினாய்.