Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 66)
Dasaka 7 - நான்முகனின் தோற்றம்
ஏவம் தேவ சதுர்தசாத்மக ஜகத்ரூபணே: ஜாத: புன: தஸ்யோர்த்வம் கலு ஸத்ய லோக நிலயே ஜாதோSஸி ததா ஸ்வயம் யம் சம்ஸந்தி ஹிரண்யகர்ப்பமகில த்ரைலோக்ய ஜீவாத்மகம் யோSபூத் ஸ்பீத ரஜோ விகார விகஸந்நாநா ஸிஸ்ருக்ஷா ரஸ: ஏவம் தேவ சதுர்தச ஆத்மக ஜகத்ரூபணே: ஜாத: புன: தஸ்ய ஊர்த்வம் கலு ஸத்ய லோக நிலயே ஜாத: அஸி ததா ஸ்வயம் யம் சம்ஸந்தி ஹிரண்யகர்ப்பம் அகில த்ரைலோக்ய ஜீவாத்மகம் ய: அபூத் ஸ்பீத ரஜோ விகார விகஸந் நாநா ஸிஸ்ருக்ஷா ரஸ: एवं देव ! चतुर्दशात्मकजगद्रूपेण जातः पुन - स्तस्योर्ध्वं खलु सत्यलोकनिलये जातोऽसि धाता स्वयम् । यं शंसन्ति हिरण्यगर्भमखिलत्रैलोक्यजीवात्मकं योऽभूत् स्फीतरजोविकारविकसन्नानासिसृक्शारसः
தேவனே! குருவாயூரப்பா! இப்படியாக பதினான்கு லோகங்களின் வடிவமாகவே தோன்றிய நீ அவற்றின் மேலே உள்ள ஸத்யலோகம் என்பதில் ப்ரும்மாவாக (நான்முகன்) தோன்றினாய். பூமி, ஸ்வர்கம், பாதாளம் என்னும் மூன்று உலகங்களிலும் ஜீவனின் ரூபமாகவே உள்ளவனை ஹிரண்யகர்ப்பன் என்பர். அப்படிப்பட்ட ப்ரும்மா (நான்முகன்) தனது மாறுபாடுகள் அடைந்த ரஜோகுணம் காரணமாக பலவிதமான ஸ்ருஷ்டிகளைச் செய்வதில் ஆர்வம் கொண்டான் (விளக்கம் காண்க).விளக்கம் – கீழ் ஏழு லோகங்களை மொத்தமாக பாதாளம் என்பர். இது ஒரு லோகமாகும், இரண்டாவது பூலோகம், எஞ்சிய ஆறு லோகங்களை ஒன்றாகச் சேர்த்து மூன்றாவது லோகம் என்பர். ஸ்ரீமத்பாகவதத்தின் இரண்டாம் ஸ்கந்தம், ஒன்பதாம் அத்யாயம் இந்த தசகத்தில் கூறப்பட்டுள்ளது.