Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 65)

Dasaka 6 - விராட் புருஷ உருவம்

ஈத்ருக் ஜகன்மய வபுஸ்தவ கர்ம பாஜாம் கர்மாவஸான ஸமயே ஸ்மரணீயமாஹு: தஸ்யாந்தராத்ம வபுஷே விமலாத்மனே தே வாதால வாதிப நமோSஸ்து நிருந்த்தி ரோகான் ஈத்ருக் ஜகன்மய வபு: தவ கர்ம பாஜாம் கர்ம அவஸான ஸமயே ஸ்மரணீயம் ஆஹு: தஸ்ய அந்தராத்ம வபுஷே விமலாத்மனே தே வாதால வாதிப நம: அஸ்து நிருந்த்தி ரோகான் ईदृग्जगन्मयवपुस्तव कर्मभाजां कर्मावसानसमये स्मरणीयमाहुः । तस्यान्तरात्मवपुषे विमलात्मने ते वातालयाधिप ! नमोऽस्तु निरुन्धि रोगान्

அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும், எங்கும் நிறைந்து, நிர்மலமாகவும் உள்ள குருவாயூரப்பா! உன்னுடைய இந்தத் திருமேனியின் தோற்றம் என்பது தங்கள் கர்மங்களைச் சரியாக நிறைவேற்றுபவர் யாரோ அவர்களுக்கு அந்தக் கர்மங்கள் முடிவுறும் நேரத்தில் த்யானிக்கத் தக்கது என்று சொல்கிறார்கள். இப்படியான உனக்கு என் நமஸ்காரம். எனது வ்யாதிகளை நீதான் போக்க வேண்டும்.***