Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 64)
Dasaka 6 - விராட் புருஷ உருவம்
ஸம்ஸார சக்ரமயி சக்ரதர க்ரியாஸ்தே வீர்யம் மஹாஸுரகணோSஸ்தி குலானி சைலா: நாட்யஸ்ஸரித்ஸமுதயஸ்தரவச்ச ரோம ஜீயாதிதம் வபுரநிர்வசநீயமீச ஸம்ஸார சக்ரம் அயி சக்ரதர க்ரியா: தே வீர்யம் மஹா அஸுர கண: அஸ்தி குலானி சைலா: நாட்ய: ஸரித் ஸமுதய: தரவ: ச ரோம ஜீயாத் இதம் வபு: அநிர்வசநீயம் ஈச संसारचक्रमयि चक्रधर ! क्रियास्ते वीर्यं महासुरगणोऽस्थिकुलानि शैलाः । नाड्यस्सरित्समुदयस्तरवश्च रोम जीयादिदं वपुरनिर्वचनीयमीश !
சக்கரத்தை ஏந்தியவனே! ஈசனே! குருவாயூரப்பா! உன்னுடைய செயல்கள் அனைத்தும் ஸம்ஸார சுழற்சியான பிறப்பு இறப்பு என்பவை; உனது வீர்யமானது அசுரர்கள்; உனது எலும்புகளே மலைகள்; உனது நாடி நரம்புகள் என்பது நதிகள்; உனது முடிகளே மரங்கள் ஆகும். இப்படியாக வர்ணனை செய்யவே இயலாததாக உள்ள இந்த விராட் புருஷனின் திருமேனி என்றும் வெற்றி பெறுக!