Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 63)

Dasaka 6 - விராட் புருஷ உருவம்

ச்ரோணீஸ்தலம் ம்ருககணா: பதயோர்நகாஸ்தே ஹஸ்த்யுஷ்ட்ர ஸைந்தவமுகா: கமனம் து கால: விப்ராதி வர்ண பவனம் வதனாப்ஜ பாஹு: சாரூரு யுக்ம சரணம் கருணாம்புதே தே ச்ரோணீ: ஸ்தலம் ம்ருககணா: பதயோ: நகா: தே ஹஸ்தி உஷ்ட்ர ஸைந்தவ முகா: கமனம் து கால: விப்ராதி வர்ண பவனம் வதன அப்ஜ பாஹு: சாரு உரு யுக்ம சரணம் கருணாம்புதே தே श्रोणिस्थलं मृगगणाः पदयोर्नखास्ते हस्त्युष्ट्रसैन्धवमुखा गमनं तु कालः। विप्रादिवर्णभवनं वदनाब्जबाहु - चारूरुयुग्मचरणं करुणांबुधे ते

கருணைக் கடலே! குருவாயூரப்பா! உனது இடுப்பானது மிருகக் கூட்டம்; காலில் உள்ள நகங்களே யானை, குதிரை போன்றவை; உனது கம்பீர நடையானது காலம்; உனது தாமரை போன்ற முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்கள் என்பவையே ப்ராமணன் போன்ற நான்கு வர்ணங்கள் ஆகும்.