Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 62)
Dasaka 6 - விராட் புருஷ உருவம்
ப்ருஷ்டம் த்வதர்ம இஹ தேவ மன: ஸுதாம்சு: அவ்யக்தம் ஏவ ஹ்ருதயாம்புஜம் அம்புஜாக்ஷ குக்ஷி: ஸமுத்ர நிவஹா வஸனம் து ஸந்த்யே சேப: ப்ரஜாபதிரஸௌ வ்ருஷணௌ ச மித்ர: ப்ருஷ்டம் து அதர்ம இஹ தேவ மன: ஸுதாம்சு: அவ்யக்தம் ஏவ ஹ்ருதய அம்புஜம் அம்புஜாக்ஷ குக்ஷி: ஸமுத்ர நிவஹா வஸனம் து ஸந்த்யே சேப: ப்ரஜாபதி: அஸௌ வ்ருஷணௌ ச மித்ர: पृष्ठं त्वधर्म इह देव मनस्सुधांशु - रव्यक्तमेव हृदयांबुजमम्बुजाक्ष ! । कुक्षिस्समुद्रनिवहा वसनं तु सन्ध्ये शेफः प्रजापतिरसौ वृषणौ च मित्रः
தேவர்கள் தேவனே! குருவாயூரப்பா! தாமரை போன்ற அழகிய கண்கள் உடையவனே! உனது திருமேனியின் பின்புறம் அதர்ம தேவதை, மனமே சந்த்ரன், இதயமானது அவ்யக்தம் (ப்ரக்ருதி), வயிறானது ஸமுத்ரங்கள், அணிந்துள்ள ஆடையே ஸந்த்யாகாலம், ஆண் குறியே ப்ரஜாபதி, அண்டகோசம் இரண்டும் மித்ர தேவதை ஆகும்.