Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 61)
Dasaka 6 - விராட் புருஷ உருவம்
மாயா விலாஸ ஹஸிதம் ச்வஸிதம் ஸமீரோ: ஜிஹ்வா ஜலம் வசனமீச சகுந்த பங்க்தி: ஸித்தாதய: ஸ்வரகணா முகரந்த்ரமக்னி: தேவா புஜா: ஸ்தனயுகம் தவ தர்மதேவ: மாயா விலாஸ ஹஸிதம் ச்வஸிதம் ஸமீரோ: ஜிஹ்வா ஜலம் வசனம் ஈச சகுந்த பங்க்தி: ஸித்த ஆதய: ஸ்வரகணா முக ரந்த்ரம் அக்னி: தேவா புஜா: ஸ்தனயுகம் தவ தர்மதேவ: माया विलासहसितं श्वसितं समीरो जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्तिः। सिद्धादयस्स्वरगणा मुखरन्ध्रमग्नि - र्देवा भुजाः स्तनयुगं तव धर्मदेवः
ஈசனே! குருவாயூரப்பா! உன்னுடைய மனங்கவரும் புன்சிரிப்பானது மாயை, உனது மூச்சானது வாயு, நாக்கானது நீர், வாக்கு என்பது பறவைகளின் கூட்டம், ஸ்வரங்கள் என்பது சித்தர்கள் கூட்டம், வாயானது அக்னி, கைகளோ தேவர்கள், உனது இரு ஸ்தனங்களும் தர்மதேவன் ஆகும்.