Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 60)

Dasaka 6 - விராட் புருஷ உருவம்

நிச்சேஷ விச்வரசனா ச கடாக்ஷ மோக்ஷ: கர்ணௌ திசோSச்வியுகலம் தவ நாஸிகே த்வே லோபத்ரபே ச பகவந்நதரோத்த ரோஷ்டௌ தாராகணாச்ச தசனா: சமனச்ச தம்ஷ்டரா நிச்சேஷ விச்வ ரசனா ச கடாக்ஷ மோக்ஷ: கர்ணௌ திச: அச்வியுகலம் தவ நாஸிகே த்வே லோபத்ரபே ச பகவந் அதர உத்தர ஓஷ்டௌ தாரா கணா: ச தசனா: சமன: ச தம்ஷ்டரா निश्शेषविश्वरचना च कटाक्षमोक्षः कर्णौ दिशोऽश्वियुगळं तव नासिके द्वे । लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ तारागणश्च दशनाः शमनश्च दंष्ट्रा

பகவானே! குருவாயூரப்பா! இந்த விச்வத்தின் ஸ்ருஷ்டி என்பது உனது திருக்கண்களின் கடாக்ஷ பார்வையாகும். காதுகளே திசைகள், மூக்கின் இரண்டு த்வாரங்களே அச்வினி தேவர்கள், கீழ் உதடு என்பது லோபம், மேல் உதடு என்பது வெட்கம், பற்களே நட்சத்திரங்கள், தெற்றிப்பல் என்பதே யமனாகும்.