Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 58)
Dasaka 6 - விராட் புருஷ உருவம்
க்ரீவா மஹஸ்தவ முகம் ச ஜநஸ்தபஸ்து பாலம் சிரஸ்தவ ஸமஸ்த மயஸ்ய ஸத்யம் ஏவம் ஜகந்மயதநோ ஜகதாச்ரிதைர அந்யைர்நிபத்த வபுஷே பகவந்நமஸ்தே க்ரீவா மஹ: தவ முகம் ச ஜந: தப: து பாலம் சிர: தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம் ஏவம் ஜகந்மயதநோ ஜகதாச்ரிதை: அந்யை: அபி நிபத்த வபுஷே பகவந் நம: தே ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् । एवं जगन्मयतनो जगदाश्चितैर - प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते
குருவாயூரப்பா! உனது கழுத்து மஹர்லோகம், எங்கும் நிறைந்துள்ள உனது தலையானது ப்ரஹ்மலோகம் ஆகும். இப்படியாக பதினான்கு லோகங்களையும் உனது உடலின் உறுப்புகளாகக் கொண்டவனே! இந்த லோகங்களில் உள்ள அனைத்துப் பொருட்களுமே உன் திருமேனியில் உள்ளன. இப்படியான திருமேனி உடைய உனக்கு என் நமஸ்காரங்கள்.