Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 57)

Dasaka 6 - விராட் புருஷ உருவம்

ஜங்கே தலாதலமதோ ஸுதலம் ச ஜாநூ கிஞ்ச ஊருபாகயுகலம் விதலாதலே த்வே க்ஷோணீதலம் ஜகநமம்பரம் அங்க நாபி: வக்ஷஸ்ச சக்ர நிலயஸ்தவ சக்ரபாணே ஜங்கே தலாதலம் அத: ஸுதலம் ச ஜாநூ கிஞ்ச ஊரு பாக யுகலம் விதல அதலே த்வே க்ஷோணீதலம் ஜகநம் அம்பரம் அங்க நாபி: வக்ஷ: ச சக்ர நிலய: தவ சக்ரபாணே जङ्घे तलातलमथो सुतलं च जानू किञ्चोरुभागयुगलं वितलातले द्वे । क्षोणीतलं जघनमम्बरमङ्ग नाभि - र्वक्षेश्च शक्रनिलयस्तव चक्रपाणे

குருவாயூரப்பா! சக்கரத்தை கையில் ஏந்தியுள்ளவனே! உன்னுடைய முழங்கால்கள் தலாதலம், தொடைகள் ஸுதலம், இரு தொடைகளும் விதலம் மற்றும் அதலம், இடுப்பு பூலோகம், தொப்புள் ஆகாயம் (வானம்), மார்பு ஸ்வர்கம் ஆகும் (தலாதலம், ஸுதலம், அதலம், விதலம் ஆகியவை கீழ் லோகங்கள் ஆகும்).